பிரேணைக்கு ஆதரவளிக்காவிட்டால் அமெரிக்கா, இந்தியாவுக்கு பொருளாதார தடை விதிக்கும்? ஆய்வாளர்கள் கருத்து

america-india-flagஇலங்கை அரசாங்கத்துக்கு எதிரான ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு, இந்தியா ஆதரவு வழங்காத பட்சத்தில், இந்தியாவில் இருந்து இறக்குமதிகளை மட்டுப்படுத்தி பொருளாதார தடையை ஏற்படுத்துவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா இலங்கைக்கு எதிராக இரண்டு பிரேரணைகளை முன்வைத்திருந்தது.

இந்த இரண்டு பிரேரணைகளிலும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தப்பட்டிருந்த போதும், இந்தியாவின் தலையீட்டினால் இது வெறும் சுயாதீன யோசனையாக மாற்றம் செய்யப்பட்டது.

எனினும் இந்த வருடம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் வாக்களிப்பதற்கு பிரித்தானியாவும் தகுதி பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியமற்ற ஒன்றாகியுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் ஜெனீவா மாநாட்டில் தமது பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க மறுத்தால், இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா தடை செய்ய தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் நாளை இந்தியா செல்லும் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வால் இந்திய அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக தெரிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS: