போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச நடவடிக்கை வேண்டும் என்று பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.
இன்று ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் 25வது மாநாட்டிலே பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது.
இம்மாநாட்டில் உரையாற்றிய பிரித்தானிய அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர்,
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இரு தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமை தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும்.
ஒரு சர்வதேச விசாரணை இடம்பெறுவதால் இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் உருவாக வழி வகுக்கும்.
அத்துடன், உண்மையினை நிலைநாட்டுவதற்கு மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையினை செயல்படுத்துவது ஐக்கிய நாடுகள் சபையின் கடமையாகும் என குறிப்பிட்டுள்ளார்.