கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு மருத்துவக் கட்டணங்கள் கூடி இருப்பதாக நீங்கள் நினைத்தால் அது சரிதான்.
அறுவைச் சிகிச்சைக் கட்டணங்கள் உள்பட எல்லாவகை மருத்துவக் கட்டணங்களும் வெளியில் தெரியாமல் கமுக்கமான முறையில் உயர்த்தப்பட்டுள்ளன.
மருத்துவர்களான எம்பிகளைக் கேட்டால் அவர்களுக்கும் இது பற்றித் தெரியவில்லை.
“இதைப் பற்றி கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் எதுவும் விவாதிக்கப்படவில்லையே”, என்கிறார் பிகேஆரின் வங்சா மாஜு எம்பி டாக்டர் டான் கீ குவோங்.
மருத்துவக் கட்டணத்தை உயர்த்துவது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டியதில்லை. தனியார் உடல்நலப் பராமரிப்புச் சேவைச் சட்டம் மருத்துவக் கட்டணத்தில் திருத்தம் செய்யும் அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்குகிறது.
“முன்னாள் மருத்துவர் என்ற முறையில் மருத்துவக் கட்டண உயர்வு தேவையற்றது என்றே நினைக்கிறேன்…….பல்வேறு விலை உயர்வுகளால் பொதுமக்கள் ஏற்கனவே துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்”, என்று டான் கூறினார்.
தே.மு. அரசாங்கம்
இதெல்லாம் போய் வெளியே சொல்லிவிட்டா செய்வாங்க. அதுவும் காஜாங் தேர்தல் நடக்கவிருக்கையிலே! மருத்துவர்களைக் கேட்டால், எல்லாமே விலை ஏறி விட்டது, நாங்கள் எங்களுடைய கட்டணத்தையும் ஏற்ற வேண்டியுள்ளது என்கின்றனர். தனியார் மருந்தகம் வேண்டாம் என்றால் அரசாங்க மருத்துவமனைக்குப் போங்கள். உங்களுக்குத் தெரிந்த மருத்துவர் இருந்தால் என்னென்ன மருந்து வேண்டுமோ அனைத்தையும் RM1/= – ல் வாங்கிக் கொண்டு வந்து விடலாம். அவசரக் காலத்தில் பிழைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் தமிழர்களே. வீணாக பணத்தை தண்ணீர் பட்ட பாடாக செலவழிக்க வேண்டாம்.
மெடிக்கள் காட் வாங்கிகொள்ளும்,இன்சூரன்ஸ் போன்றவை.விலை குரைவு தான் (பமிலி காட்).முன் பணம் இல்லாது(அதாவது காா்டை கான்பித்து சிகிச்சை பெருவது)படுக்கைக்கு ஆா்.எம் 200க்கு உயா்தி கொள்ளவும்.கவுரவமா இருக்கும்.நாராயண சமா்பணம்.