வடக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுக!– மன்மோகன் சிங் மகிந்தவுக்கு வலியுறுத்தல்!

mahinda_manmokan_miyanmar_001வடமாகாணத்தில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியுள்ளார்.

மியன்மாரில் இன்று அவர்கள் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்த தகவல்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் த ஹிந்து பத்திரிகைக்கு வெளியிட்டுள்ளார்.

இதன்படி, வடக்கில் தற்போது காணப்படுகின்ற இராணுவத்தினரை வெளியேற்றுமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதற்கு அமைய, அதற்கு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் வடக்கில் இருந்து 175,000 துருப்பினரை வெளியேற்றி இருப்பதாகவும், எஞ்சியுள்ள இராணுவத்தினரை கண்ணி வெடி அகற்றும் பணிகள் மற்றும் உட்கட்டுமான நிர்மாணப் பணிகள் என்பன நிறைவடைந்த பின்னர் வெளியேற்றுவதாக மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருக்கிறார்.

இதன் போது மேலும் மீனவர்களின் பிரச்சினை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்துமாறு மன்மோகன் சிங் மகிந்த ராஜபக்சவை வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: