தனியார் மருத்துவக் கட்டணங்கள் திருத்தப்பட்டதற்கு ஒரு பக்கத்தில் எதிர்ப்புக் கிளம்பி இருக்கும்வேளையில் மறுபக்கம் மலேசிய மருத்துவச் சங்கம், நீண்டகாலத்துக்கு முன்பே இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் 12 ஆண்டுகளாக மருத்துவக் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
“ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அதைப் பரிசீலனை செய்ய வேண்டும். ஆனால், அது உயர்த்தப்படவில்லை. கடைசியாக மருத்துவக் கட்டணம் பரிசீலனை செய்யப்பட்டது 12 ஆண்டுகளுகளுக்கு முன்பு”, என எம்எம்ஏ தலைவர் டாக்டர் என்.கே.எஸ். தர்மசீலன் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
பயனீட்டாளர் விலைக் குறியீட்டின்படி(சிபிஐ) பார்த்தால் 14.5 விழுக்காடு மருத்துவக் கட்டண உயர்வு என்பது குறைவான ஒன்றுதான் என்று தரமசீலன் கூறினார்.
“அது சிபிஐ உயர்வுக்கு ஏற்பவும் இல்லை, 2002-இலிருந்து ஏற்பட்டுள்ள பணவீக்கத்தைப் பிரதிபலிக்கவும் இல்லை. ஆனாலும், சேவையை முன்னிறுத்தி அதை ஏற்றுக்கொள்கிறோம்”, என்றாரவர்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மருத்துவ கட்டணத்தை உயர்த்த பரிசீலனை செய்ய வேண்டும்மென்று கூறும் உங்கள் சங்கம், மருத்துவர்களின் தரத்தினை உயர்த்த எடுத்துக்கொண்ட முயற்சிதான் என்ன??? அல்லது, இப்போதுள்ள மருத்துவர்களின் தரத்திற்கேற்ப (டிஸ்கவுன்) போட்டுக் கொடுப்பீரோ????? இதில் எம்எம்சி எனப்படும் மலேசிய மருத்துவக் கழகமும் கொண்டுள்ள பொறுப்பும் அடங்கும்.
நீ இப்படி சொல்ற ,அங்கே பில்லா பார்த்தா ரத்த வாந்தி வருது
மருத்துவத்திலும் அரசியலா? 5 வருசத்துக்கு ஒரு முறை பரிசீலனை பண்றதுக்கு.இப்படி விலை ஏறிகிட்டே போன காசு இல்லாதவங்க தானவே பொய் சுடுகாடுல படுத்துக்க வேண்டியதுதான்
Intha mama kosu tholla thangamudiyala pa…
அபடின சம்பளம் உயரவில்லையே …விலைவாசி உயருகிறது ..
அப்படினா கடந்த 12 வருஷமா உங்கள் மருத்துவத்திலும் எந்த மாற்றமும் இல்லையேன்னு நாங்கள் கிண்டல் அடீக்கலாமா!