இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசுதரப்பு செய்த மேல்முறையீடு இன்று விசாரணைக்கு வருகிறது. அதன் விசாரணைக்காக முறையீட்டு நீதிமன்றம்-இன்றும் நாளையுமாக- இரண்டு நாள்களை ஒதுக்கியுள்ளது.
மேல்முறையீடு மீதான விசாரணைக்கு மூத்த வழக்குரைஞர் ஷாபி அப்துல்லா தலைமை தாங்க அனுமதிக்கக்கூடாது என்று அன்வார் செய்திருந்த மனுவைக் கூட்டரசு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இவ்விசாரணை தொடங்குகிறது.
இவ்விசாரணை லாஆசியா, பன்னாட்டு நாடாளுமன்றச் சங்கம், பன்னாட்டு மனித உரிமை கூட்டமைப்பு, பன்னாட்டு நடுவர் மன்றம் எனப் பன்னாட்டுப் பார்வையாளர்களின் கவனத்தைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூாியன்,குரு,பகைபோலும்.ஆனால் ராகு,கேது,சுக்கிரன் போன்றவா் மட்டும் நட்போ,ஆதலால் தான் உம் இனத்தை விட்டு அன்னிய இன ஆதரவை நாடுகிறீா்.கவணம் தூக்கி உள்ளே போடபோராங்க,எதுக்கும் துணிவா் போலீஸ்,நீதிமன்றம்,அரண்மனை,குண்டா்,எல்லாம் உம்னோ கையில்.ஒரு எம்.சி/எட்மிட்,உமக்கு தொியுமே என்ன நான் சொல்ல.காஜாங் தோ்தலில் நிட்பீரா…. .நாராயண நாராயண.
டேய் எவன் வந்தாலும் எங்கள் தலைவன் செய்து காட்டுவான் ,இது சத்தியம்