முன்னாள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்முட் காலி செய்த பாலிங்கான் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் மார்ச் 29-இல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காஜாங் இடைத் தேர்தல் முடிந்த ஒரு வாரத்தில் அந்தத் தேர்தல் நடைபெறும்.
சரவாக் ஆளுனர் பதவி ஏற்பதற்காக அப்துல் தாயிப், அத்தொகுதியை பிப்ரவரி 28-இல் காலி செய்தார்.
அது, 2013 மே பொதுத் தேர்தலுக்குப்பின் நடைபெறும் மூன்றாவது இடைத் தேர்தலாகும் என்றும் அதற்கான வேட்பாளர் நியமனம் மார்ச் 17-இல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் யூசுப் கூறினார்.