இலங்கை குறித்து விசாரணை நடாத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படலாம்?

navaneethampillai201இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படலாம் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவுள்ளன.

இந்த தீர்மானம் தொடர்பில் விசாரணை நடாத்த உரிய அதிகாரி ஒருவரையோ அல்லது நிபுணர் குழு ஒன்றையோ ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் 28ம் திகதி நவனீதம்பிள்ளை தனது தீர்மானத்தை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் விசாரணை குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி நவனீதம்பிள்ளைக்கு தொலைபேசி மூலம் சிலர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இவ்வாறான உரிய அதிகாரியோ அல்லது நிபுணர் குழு ஒன்றே நியமிக்கப்படுவதனை எதிர்ப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மட்டும் இலங்கைக்கு எதிராக மனித உரிமைப் பேரவைக்கு 500 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தும் காலம் வந்துள்ளது – நவநீதம்பிள்ளை

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுப்பதற்கான காலம் வந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் தமது வருடாந்த அறிக்கையை வெளியிட்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் ஆகின்றன.

ஆனால் இலங்கை மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய பதில்களை அரசாங்கம் வழங்க தவறி இருக்கிறது.

இலங்கையின் உள்நாட்டு பொறிமுறைகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு, இலங்கை தொடர்பில் தமது சொந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

TAGS: