இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா பயணம்

british_flag_army_001இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்ய பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவா பயணம் செய்ய உள்ளனர்.

பிரிட்டனின் தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்ப் பிரதிநிதிகளும் ஜெனீவா நோக்கிப் பயணம் செய்ய உள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்க உள்ளனர்.

மாநாட்டில் பங்கேற்று இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கப் போவதாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து ஜெனீவாவில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

TAGS: