நவநீதம்பிள்ளை ஒரு பொய்யர்: இலங்கை ஆவேசம்

samarasinga_pillay_001இலங்கை தொடர்பில் ஆக்ரோஷத்துடன் இருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஒரு பொய்யர் என இலங்கை அரசாங்கம் அவரை கடிந்து கொண்டுள்ளது.

தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் இன்று பேசிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளரை இவ்வாறு சாடியுள்ளார்.

சில நாடுகளிடம் இருந்து வரும் அழுத்தங்கள் ஐ.நா மனித உரிமை தலைமை கொடுக்கும் அழுத்தங்களில் சிக்கி, விடுதலைப் புலிகளுடன் போராடிய இராணுவத்தினரை அரசாங்கம் காட்டிக் கொடுக்காது.

சில இராணுவ வீரர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்நாட்டில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் அவர்கள் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டால் அவர்களுக்கு எதிராக இராணுவத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டு மக்களுக்காகவும் படையினருக்காகவும் எதனையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

கடந்த 8 வருடங்களாக ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டங்களில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளின் தலைவராக கலந்து கொண்டு நாட்டுக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுக்களில் இருந்து நாட்டை பாதுகாத்துள்ளேன்.

சில நாடுகளின் தேவைகளின் அடிப்படையில் செயற்படுவதாகவும் இலங்கைக்கு நியாயமான வகையில் செயற்படவில்லை எனவும் நான் நவநீதம்பிள்ளையிடம் கூறினேன். அத்துடன் நாங்கள் எமது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம் எனவும் சமரசிங்க கூறியுள்ளார்.

இதேவேளை, அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஜெனிவா செல்லவுள்ளதுடன், அங்குள்ள இலங்கை பிரதிநிதிகளுடன் இணைந்து நாளை மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் பங்கேற்க உள்ளார்.

TAGS: