இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணை கடந்த வாரம் ஊடகங்களுக்கு கசிந்திருந்தது. ஆனால் இந்த பிரேரணையானது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான ஏற்பாடுகளை கொண்டிருப்பதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் இலங்கைக்கு எதிரான விசாரணை ஒன்றுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டிருக்கவில்லை என்று புலம்பெயர்ந்த தமிழர் தரப்பிலும், இலங்கை அரசாங்கத்தின் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் இந்த பிரேரணையானது இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கான ஏற்பாடுகளை கொண்டிருப்பதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பிரேரணையில் கூறப்பட்டுள்ள ஒரு சரத்தில், இலங்கைக்கு எதிராக சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வரவேற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனி உரிமைகள் ஆணைக்குழு தங்களின் குழுவை கொண்டு விசாரணை செய்து, 27வது மனித உரிமைகள் மாநாட்டில் வாய்மூலமாகவும், 28வது மனித உரிமைகள் மாநட்டில் எழுத்து மூலமாகவும் அறிக்கைப்படுத்த வேண்டும் என்றும் இன்னுமொரு சரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரண்டு விடயங்களும், இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் அமெரிக்காவின் இராஜாங்க முன்னெடுப்பு என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இதன் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுவது உறுதியாகி இருப்பதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.