எதிர்வரும் நாட்களில் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கை தர்மசங்கடமான நிலையை எதிர்கொள்ளும்!

un_sri_flagஇலங்கை தொடர்பில் அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைத்துள்ள பிரேரணையானது இலங்கையின் அரசியல் யாப்பை மீறி இருப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகள் ஏற்பாடு செய்திருந்த இலங்கை தொடர்பான விசேட கூட்டம் ஒன்றில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்கா இந்த பிரேரணையின் மூலம் இலங்கையின் இறைமையை மீறி இருப்பதாகவும் ஜெனீவாவுக்கான இலங்கையின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் யுக்ரெயின் விவகாரம் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.

யுக்ரெயினில் தமது இராணுவத்தை நிலைகொள்ள செய்ததன் மூலம் ரஷ்யா யுக்ரெனின் அரசியல் யாப்பையும்ää அதன் இறைமையையும் மீறி இருப்பதாக அமெரிக்கா ஏற்கனவே குற்றம் சுமத்தி இருந்தது.

இந்த நிலையில் யுக்ரெயின் தொடர்பான மனித உரிமைகள் மாநாட்டின் விவாதத்தின் போதும்ää அமெரிக்கா இந்த கருத்தை முன்வைக்கவுள்ளது.

இதன் போது ரஷ்யாவுக்கு எதிராக கருத்து வெளியிட முடியாத நிலையிலும், தமது நாட்டின் இறைமை குறித்து அமெரிக்காவை விமர்சித்திருந்த நிலையிலும், இலங்கை தர்மசங்கடமான நிலைமை ஒன்றை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று ஆய்வுக் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: