இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு டேவிட் கமரூன் தனிப்பட்ட ஆதரவு

david-cameron_2இலங்கையின் இறுதிப்போர் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்பதில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனிப்பட்ட ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்

இந்த தகவலை டௌனிங் ஸ்டீட்டில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமர் அலுவலக பேச்சாளர் இதனை குறிப்பிட்டு;ள்ளார்.

இலங்கையின் இறுதிப்போரின் பின்னர் இலங்கைப்படையினர் கொல்லப்பட்ட போராளிகள் மீது பாலியல் குற்றங்கள் புரிவதை வெளிக்காட்டும் காணொளியை சனல் 4 ஊடகம் வெளியிட்ட நிலையிலேயே கமரூனின் இந்த ஆதரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் இறுதிப்போரின் போது இரண்டு தரப்பும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டன.

இதனை சர்வதேச ரீதியாக விசாரணை செய்யவேண்டும் என்று கோரி அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வந்துள்ள பிரேரணைக்கு பிரித்தானியாவும் தமது தீவிர ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையிலேயே சனல் 4வின் இறுதிக் காணொளியின் பின்னர் கமரூனின் தனிப்பட்ட ஆதரவும் இந்த சர்வதேச விசாரணைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

TAGS: