பொதுநலவாயத்தின் தலைமை ஏற்றுள்ள இலங்கை அரசாங்கம் அதன் விழுமியங்களை பாதுகாக்க தவறியுள்ளதாக கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொதுநலவாய தினத்தை முன்னயிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கனேடிய பிரதமர்,
இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளுக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மதிப்பளிக்க வேண்டும் என கனடா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.
மத சுதந்திரத்தை பாதுகாத்தல், அதனை ஊக்குவித்தல், எந்த அடிப்படையிலான பாகுபாடுகளையும் எதிர்ப்பது, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உட்பட பொதுநலவாயத்தின் பெறுமதிகள் மற்றும் கொள்கைகளை உறுப்பு நாடுகள் பின்பற்ற வேண்டும் என இன்றைய நாளில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.
21 ஆம் நூற்றாண்டில் பொதுநலவாய அமைப்பு மதிப்பு மற்றும் நம்பகத்தன்மையுடைய அமைப்பாக இருப்பது முக்கியமானது.
குறிப்பாக இலங்கையில் உள்ள நிலைமைகள் பற்றிய எனது கவலைகளை வலியுறுத்தி கூற விரும்புகிறேன் எனவும் கனேடிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.