சுதந்திரமாக வாழும் உரிமையைவிட வேறு மனித உரிமையில்லை: மகிந்த ராஜபக்ஷ

mahinda_speach_001போர் நடைபெற்ற காலத்தில் வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவது சில அரசியல்வாதிகளுக்கும், வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு பிரச்சினையாக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கல்கிஸ்சையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் சகல இடங்களிலும் பயங்கரவாத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

நாங்கள் 30 வருடங்களாக பயங்கரவாத்திற்குள் சிக்கியிருந்தோம். ஸ்ரீ மஹாபோதி, தலதா மாளிகை மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அங்கிருந்த பிக்குமார் கொல்லப்பட்டனர். காத்தான்குடியில் பள்ளி வாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். அப்படியான சமூக சூழ்நிலையே அப்போது காணப்பட்டது.

மக்கள் சுதந்திரமாக வாழ இருக்கும் உரிமையை விட வேறு மனித உரிமைகள் இல்லை. இன்று மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர்.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் என நாட்டில் வாழும் சகல மக்களுக்கு வாழ்வதற்காக உரிமையை எங்களால் பெற்றுக்கொடுக்க முடிந்தது என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

TAGS: