‘குறைகூறினால் சட்ட நடவடிக்கை ’- எச்சரிக்கிறார் போமோ

bomohகாணாமல்போன  எம்எச்370 விமானத்தைக்  கண்டுபிடிக்க  கேஎல்  அனைத்துலக  விமான  நிலையத்தில்  சில  சடங்குகளைச்  செய்த ‘போமோ’ இப்ராகிம்  மாட் ஸின்,  தமது  சடங்குமுறைகளை  இஸ்லாத்துக்கு  முரணானவை  என்று  கூறுவோருக்கு  எதிராக  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்போவதாக  எச்சரித்துள்ளார்.

தம்மை  “ராஜா போமோ”  என்று  கூறிக்கொள்ளும் இப்ராகிம்,  திருக்குர்ஆன் வாசகங்களையே தாம்  பயன்படுத்துவதாகவும்  அது  இஸ்லாத்துக்கு  ஏற்புடையதுதான்  என்றும்  கூறியதாக  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது.

“அதில்  பயன்படுத்தும்  பொருள்கள்  வெறும்  குறியீடுகள். எல்லாம்  முன்னோர்கள்  சொல்லிக்கொடுத்ததுதான். எந்தப் பொருளையும்  வைத்து  வழிபாடு  செய்வதில்லை.

“நான்  இஸ்லாத்துக்கு  முரணானதைச்  செய்வதாகக்  குற்றம் சொல்லக்கூடாது. அப்படிச்  சொல்வோருக்கு  எதிராக  சட்ட  நடவடிக்கை  எடுப்பேன்”, என  இப்ராகிம்  தெரிவித்ததாக  உத்துசான்  கூறியது.