ஜெனிவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் 26 ம் திகதி அமெரிக்கா சமர்ப்பிக்க உள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அமைய சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அவ்வாறான விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டால் அதனை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கும் என இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பக்கசார்பான முறையில் செயற்பட்டு வருவதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக ஞாயிறு திவயின குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி அமெரிக்காவின் தீர்மானம் முன்வைக்கப்படுவதற்கு முன்னர் நவநீதம்பிள்ளை உரையாற்ற உள்ளதுடன் அதன் பின்னர் அமெரிக்க தூதுவர் பீட்டர் மியூரல் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ளார்.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் கடந்த 3 ஆம் திகதி சமர்பிக்கப்பட்ட அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் சர்வதேச விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற யோசனை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மனித உரிமை ஆணையாளர் நியமிக்கும் அந்த ஆணைக்குழு இலங்கைக்கு வருவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்காது எனவும் அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் கூறின.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் அந்த பதவியில் இருந்து விலக உள்ளார். அதற்கு முன்னர் பொய்யான அறிக்கைகள் மூலம் இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றது எனக் கூறி இலங்கையை சிக்க வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்றும் திவயின கூறியுள்ளது.
சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்: அமெரிக்க உத்தேச தீர்மானம்
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உத்தேச தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய உத்தேச தீர்மானம் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றும் முக்கிய நாடுகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் ஆகியனவற்றின் அடிப்படையில் தீர்மானம் அமைந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமை சட்ட மீறல்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்.
கடந்த செப்டம்பர் மாதம் 21ம் திகதி வெற்றிகரகமான முறையில் வடக்கில் தேர்தல் நடத்தப்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது.
எனினும், தேர்தல் காலத்தில் ஒரு சில அசம்பாவிதங்கள் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதுடன் வேட்பாளர்களும் வாக்காளர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் நம்கபமான பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இலங்கை அரசாங்கம் இத தொடர்பிலான ஓர் பொறிமுறைமை ஒன்றை வருவாக்க வேண்டும்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடையர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை அமுல்படுத்த ஆவண செய்தல்.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது சர்வதேச மனிதாபிhன மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
பால்நிலை நிலை சமத்துவத்தை உறுதி செய்ய வேண்டும்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.
போர் இடம்பெற்ற வலயத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. எனினும் குறித்த பிரதேச மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது.
மதச் சுத்நதிரத்தை உறுதிப்படுத்த குறிப்பாக சிறுபான்மை இன சமூகங்களின் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நீதிமன்றின் சுயாதீனதன்மையை உறுதி செய்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அமெரிக்க உத்தேச தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.