இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கைது

sri lanka human rightஇலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் மகேசன் ஆகியோர் கிளிநொச்சியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை 2மணியளவில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அக்கிராயன் அமைதிபுரம் தேவாலய பங்குத்தந்தை பிரவீன் மகேசன் தர்மபுரம் பகுதிக்கு சென்று அங்கு கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் அமைதியின்மை பற்றி மக்களிடம் கேட்டறிந்து கொண்டிருந்த போது அங்கு சென்ற இராணுவத்தினர் அவர்களை கைது செய்தனர்.

இரவு 10மணிளவில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள் சுமார் நான்கு மணி நேரம் விசாரிக்கப்பட்டனர். அதன் பின்னர் அதிகாலை 2மணியளவில் இருவரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளனர்.ருக்கி பெர்னாண்டோ கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமைகள் ஆவண மையத்தின் (INFORM) மனித உரிமைகள் ஆலோசகராக கடமை ஆற்றுகிறார். (Human Rights adviser INFORM Human Rights Documentation Centre based in Colombo) அருட் தந்தை பிரவீன் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்டு இயங்கும் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான அமைப்பின் (CPR) இயக்குனர்.(Director of the Centre for Peace and Reconciliation (CPR) based in Jaffna) மனித உரிமைகள் பாதுகாவலர்.

இவர்கள் இருவரும் அண்மையில் கிளிநொச்சி தர்மபுரத்தில் கைது செய்யப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரி அவரின் மகள் பூர்விகா ஆகியோருடைய கைது தடுத்து வைப்பு குறித்து கரிசைனை செலுத்தியதோடு அந்த சம்பவங்கள் குறித்து ஆய்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் கைது செய்யப்பட்டதை கேள்வியுற்ற யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தனது பிரதிநிதியாக அருட்தந்தை போல் நட்சத்திரம் அவர்களை கிளிநொச்சி காவல்நிலையத்திற்கு அனுப்பியிருந்தார். எனினும் கைது செய்தவர்களை தாம் விடுதலை செய்ய முடியாது என்றும் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு இவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பதற்காக செயற்பட்டுள்ளனர் என்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

TAGS: