நாளை கோலாலும்பூரில் தங்குவிடுதி ஒன்றில் போக்குவரத்து அமைச்சு நடத்தும் எம்எச்370 விளக்கக் கூட்டத்துக்குத் தங்களுக்கு அழைப்பு இல்லை என்பதால் கொதித்துப் போயுள்ளனர் பக்காத்தான் எம்பிகள்.
அமைச்சின் போக்கு நாடாளுமன்றத்தையே இழிவுபடுத்துவதாக பவுசியா சாலே(பிகேஆர்- குவாந்தான்) கூறினார்.
இந்த விளக்கக்கூட்டத்தை மக்களவையிலேயே நடத்தி இருக்கலாம் என்றவர்கள் சொன்னார்கள்.
ஆனால், நோ ஒமார்(பிஎன் -தஞ்சோங் காராங்) அரசாங்கத்தைத் தற்காத்துப் பேசினார். மாற்றரசுக் கட்சியினரைக் கூட்டத்துக்கு அழைத்தால் அதில் கூறப்படும் தகவல்கள் “விளக்கக் கூட்டம் முடிவதற்கு முன்பே சமூக வலைத்தளங்களில் பரவி விடும்” என்றார்.
யாரை அழைப்பது யாரை அழைக்கக்கூடாது என்பது அமைச்சரின் தனியுரிமை. அது குறித்துக் கேள்வி கேட்கக்கூடாது என்றாரவர்.
ஜனநாயகம் என்பது என்ன?மக்கள் தேர்தெடுத்த பிரதிநிதியை எப்படி தடுக்க முடியும்.
இதற்குப் போய் ஆத்திரம் எல்லாம் வேண்டாமே? அறிவுக்கு வேலை கொடுங்கள். இக்கூட்டத்தில் தே.மு. மூடி மறைக்க விரும்பும் மந்திரமென்ன என்று ஒரு கேள்வியைக் கேட்டு அரசியல் புரளியை ஏற்படுத்த தெரியாத நீங்கள் எல்லாம் எதிர் கட்சி தலைவர்கள் என்றால் என்னாவது! ஆளும் கட்சியினர் இதைக் கேட்ட மாத்திரத்தில் நீங்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். நாங்கள் மறைக்க வேண்டிய மந்திரம் ஏதும் இல்லை என்று அவர்களாகவே உங்களை வருந்தி அழைக்க வையுங்கள். உங்களுக்கு எப்படி எதிர் கட்சி அரசியல் நடத்துவது என்றே தெரியவில்லை.
BN எம்பிககளுக்கு MH 370 விளக்க கூட்டமா ??? அல்லது MH 370 விமான கடத்தல் நாடகத்தின் 11-வது நாள் வெற்றி கொண்டாட்டமா ???
முதிர்ச்சி அடையாத முட்டாள் அம்னோ அமைச்சர்கள் இப்படித் தான் இருப்பான்கள்.
MH 370 விமான கடத்தல் நாடகத்தின் 11-வது நாள் வெற்றி விழாவில் அனைத்து BN எம்பிககளும் கலந்து கொள்ள வேண்டும் என்று மேலிட கட்டாய உத்தரவாம். இந்த வெற்றி விழாவில் அனைத்து BN எம்பிககளும் “1 வெள்ளி கோழி” ஒன்று இலவசமாக வழங்கப்படும்.
பி என் நீங்கள் நடத்தும் நாடகம் விரைவில் ஒரு முடிவிற்கு
வேண்டும் ,உலகமே உங்களின் திறமையற்ற செயலை கண்டு ஆத்திரம் கொள்கிறது ,உண்மையை எடுத்து சொல்ல அந்த
கூட்டத்தில் யார் வந்து கலந்துக்கொண்டால் என்ன ,மடியில்
கணம் இருந்தால் தானே வழியில் பயம் , என்ன செய்வது
இவர்கள் சிந்து விளையாட்டில் 227 பயணிகள் பலிகடாவா ?
பூசல் வேண்டாம் ஒற்றுமையாக
செயல்படுவோம் விமானத்தை
கண்டுபிடியுங்கள்
இப்போது நிலவரமே வேறு,குட்டிப்புலி 8 அடி பாஞ்ச,தாய் புலி 16 அடி பாயுமாம்.நாராயண சித்தம்.