அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டமிட்டபடி மலேசியாவுக்கு வருவார்.
ஆனால், அவரது வருகைக்கான தேதியும் பயண நிரலும்தான் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என கோலாலும்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்தி பொறுப்பாளர் ஹார்வி செர்னோவிட்ஸ் இன்று கூறினார்.
“கடந்த மாதம் வெள்ளை மாளிகை அறிவித்தபடி ஏப்ரல் மாதக் கடைசியில் அதிபர் ஆசியாவுக்கு மேற்கொள்ளும் நான்கு-நாடுகள் பயணத்தின் ஒரு பகுதியாக மலேசியாவுக்கும் வருகை புரிவார்”, என்றாரவர்.
ஒபாமா, ஏப்ரல் கடைசியில் ஜப்பான், தென் கொரியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார்.
எம்எச்370 காணாமல்போனதை அடுத்து அதிபர் ஒபாமாவின் வருகை ஒத்திவைக்கப்படுமா என்று வினவப்பட்டதற்கு செர்னோவிட்ஸ் இவ்வாறு பதிலளித்தார்.
அவரது வருகைக்கான தேதியும் பயண நிரலும்தான் இன்னும் இறுதி. ( இறுதி.) இல்லை (உறுதி )
.
இதுதான் இப்போ ரொம்ப குறையா இருக்கு இந்த நாட்டுக்கு! இந்த ஆளு வந்தா மட்டும் என்ன? எல்லாம் சரியாக போவுதா? பத்தோட பதினொன்னு இத்தோட இதுவும் ஒன்னு இன்னுல ஆயிபோச்சி கதை இந்த ஆளு விசயத்திலும்!
ராஜா போமோவை பார்க்க வருகிறார் போல..
இறுதி – வரையறை , எல்லை , முடிவு , அழிவு , சாவு , இப்படி பல அர்த்தங்கள் உண்டு . இன்னும் இறுதி ( முடிவு ) செய்யப்படவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம் . நம்ம தமிழுக்கு – தமிழே இணை !! வளர்ப்போம் !!
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை வரவேற்க ராஜா போமோவின் பறக்கும் கம்பளம் ரெடி. கம்பளத்தில் உட்கார்ந்து அவரை வரவேற்க போகும் ‘THREE STOOGES’ யார் ??? என்ற கேள்விக்கு சரியான பதில் தருவோருக்கு “BANTUAN STOOGES 1 MALAYSIA ‘ வழங்க படும்.
தற்போதைய நிலவரப்படி பரிந்துரை செய்ய பட்ட பெயர்கள் :-
பிரதமர் / உள்துறை அமைச்சர் / தற்காப்பு அமைச்சர் மற்றும்
தற்காலிக போக்குவரத்து அமைச்சர் / வெளியுறவு துறை அமைச்சர் / DCA இயக்குனர் / MAS தலைமை நிர்வாகி
.