காஜாங்கில் சீன வாக்காளர்கள் “அவர்களின் இனத்தவருக்கே வாக்களிக்க வேண்டும்” என்று கூறிய பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப்பை எதிரணி எம்பி தெரேசா கொக் சாடினார்.
அரசாங்க பாரங்களில் “இனம்” என்பதைக் குறிப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தை எடுத்துவிட வேண்டும் என்று கடந்த மாதம் வலியுறுத்திய குருப்தான் இடைத் தேர்தலில் “இனவாதம் பேசுகிறார்” என சிபூத்தே எம்பி விளாசினார்.
தேசிய ஒற்றுமை அமைச்சர் பணியை அவர் நேர்மையாக செய்கிறாரா எனவும் தெரேசா வினவினார்.
“தேசிய ஒற்றுமைக்குப் பொறுப்பாக உள்ள அமைச்சர் இடைத் தேர்தலில் இனவாதம் பேசுதல் அழகா?
“இவர் ஒற்றுமை அமைச்சரா அல்லது ஒற்றுமையின்மை அமைச்சரா?- மலேசியர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்”,என கொக் கூறினார்.
இந்த அமைசர்கள் நேரத்துக்கு ஒன்னு பேசறாங்க,இவங்களுக்கு ஒன்னுனா சரி,மற்றவர்களுகுணா பிழை,என்ன அமைசர்கள் இவர்கள் மக்களை குழப்புகிறார்கள்,அனால் மக்கள் தெளிவாக போடுவார்கள்.
நானும் சுமார் 35 ஆண்டுகளாக அரசாங்க ஊழியராக பணியாற்றி ஒய்வு பெற்றவன் தான். இன்னும் ஒற்றுமைக்கு விளக்கம் தெரியவில்லை.அம்னோ காரனை பொருத்தவரை ஒற்றுமை என்பது மேடை பேச்சு மட்டுமே. இன ஒற்றுமையைப் பற்றி மேடைகளில் கூவும் அம்னோ காரன் பரிசான் நேசனல் கட்சியில் இன வாரியாக அம்னோ,ம.இ.கா.மற்றும் ம.சீ.ச என்று பிரித்து வைத்திருக்கின்றானே!அம்னோ பயனடையும் நேரத்தில் மட்டுமே ஒற்றுமை பிச்சாரம் மேடைகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இப்பொழுது அதையும் தாண்டி வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துவிட்டார்கள். தொடரட்டும் அம்னோ மயம்.
ஊருக்குத்தான் உபதேசம்.. பி என் கட்சியினரை குறிப்பாக அம்னோ கட்சினர் திருந்தவே மாட்டார்கள்…. கமலனாதனிடம் கேட்டுப்பாருங்கள். தெள்ளத்தெளிவாக பொதிமாடுபோல் தலையாட்டுவான்…!!!!!
அம்நோகாரன் ம இ கா என்று ஒன்றுடன் முடித்துக்கொண்டான் ! இவனுங்க உள்ளுக்குளேயே எத்துனை வர்ண ஜாலங்களுடன் அடித்துகொள்கிறார்கள் ? பழனிவேல் – குருப் , சுப்ரமணியம் -குருப் , மோகன் -குருப் , தண்டல் -குருப் , தடால் -குருப் இப்படி அவனவன் ரூட்ல போறானுங்க ! சமுதாயம் எப்படி உயரும், உருப்படும் ????
இந்த அறிக்கையின் மூலம் BN கூட்டணியில் இருக்கும் இந்திய அரசியல் கட்சிகளுக்கு, மறைமுக மிரட்டல் விடுத்திருக்கிறார்
பிரதமர்துறை அமைச்சர் .ஜோசப் குருப்.
இதன் மூலம் உங்கள் இனத்தவர்கள்(இந்தியர்கள்) அனைவரும் உங்களுக்கே வாக்களிதால்கூட ஒரு இடம் கூட கிடைக்காது என்று ம.இ.கா. -விற்கு மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.