கைது செய்யப்பட்ட இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களால் நவிப்பிள்ளையிடம் வினவப்பட்டபோது நவிப்பிள்ளையின் பதில் இறுக்கமானதாக இருந்தது.
நேற்றைய தினம் ஞாயிறு கொழும்பு மனிதவுரிமை செயற்பாட்டாளரான ருக்கி பெர்ணான்டோ (சுரமi குநசயெனெழ) என்பவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை பிரவீன் என்பரும் பயங்கரவாத தடைப்பிரிவு என்று சொல்லப்படுகின்ற பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்வது தொடர்பில் சிவில் அமைப்புக்களுடனான கருத்துப்பகிர்வில் மனித உரிமை ஆணையாளர் நவிப்பிள்ளை அவர்களிடம் வினவப்பட்து.
அதற்குப் பதிலளித்த நவிப்பிள்ளை அம்மையார் நீங்கள் குறிப்பிடும் கைதை நான் அறிவேன் ஆனாலும் அது தொடர்பில் நடவடிக்கை உண்டு என மிக கரிசனையுடன் கூறியதுடன்
இலங்கை மீது அனைத்துலக விசாரணை தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்
அனைத்துலக மனித விவகாரங்களில் மனித உரிமை சபையின் ஒப்புதலுக்கு அமைய அனைத்துலக விசாரணைக்கான அதிகாரம் தனக்கு உள்ளதென ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதிப்படுத்தினார்.
மார்ச் 17ம் நாள் திங்கட்கிழமை சிவில் அமைப்புக்களுடனான கருத்துப்பகிர்வு நவிப்பிள்ளை அவர்களது தலைமையில் நடத்தப்பட்டிருந்தது.
இதில் சிறிலங்காவினை மையப்படுத்தி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் வேளையிலேயே இக்கருத்தினை அவர் தெரிவித்திருந்தார்.
ஐ.நா மனித உரிமைச்சபையின் நடைமுறைக்கு அமைய நாடுகளுக்கு அனைத்துலகம் ஏற்கதக்க உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது என்றும் அது சாத்தியப்படாத நிலையில் அனைத்துலக தளத்தில் விசாரணைக்கான முன்னெடுப்பு இடம்பெறுகின்றது என அவர் பதிலுரைத்திருந்தார்.
அனைத்துலக விசாரணை பொறிமுறைக்கான அதிகாரம் ஐ.நா அலுவகத்திற்கு உள்ளது : ஆணையாளர் நவிப்பிள்ளை அம்மையார் !
அனைத்துலக மனித உரிமைசார் விவகாரங்களில் மனித உரிமைச்சபையின் அங்கீகாரத்துக்கு அமைய அனைத்துலக விசாரணைக்கான அதிகாரம் தனக்கு உள்ளதென ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மார்ச் 17ம் நாள் திங்கட்கிழமை சிவில் அமைப்புக்களுடனான கருத்துப்பகிர்வு, நவிப்பிள்ளை அவர்களது தலைமையில் அவரது அலுவலகப் பிரதிநிதிகளால் நடத்தப்பட்டிருந்தது
இதில் சிறிலங்காவினை மையப்படுத்தி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் வேளையிலேயே இக்கருத்தினை அவர் தெரிவித்திருந்தார்.
ஐ.நா மனித உரிமைச்சபையின் நடைமுறைக்கு அமைய நாடுகளுக்கு அனைத்துலகம் ஏற்கதக்க உள்ளக விசாரணைக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது என்றும், அது சாத்தியப்படாத நிலையில் அனைத்துலக தளத்தில் விசாரணைக்கான முன்னெடுப்பு இடம்பெறுகின்றது என அவர் பதிலுரைத்திருந்தார்.
தென்சூடான் விவகாரத்தில் ஆபிரிக்க யூனியனின் வழங்கலுக்கு அமைய, அங்கு விசாரணை நடத்தப்பட்டது என்றும் குறித்துரைத்திருந்தார்.
சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகள் உறுதி செய்ய முடியவில்லை எனவும், இந்தப் பின்னணியில் சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் பரிந்துரைப்பதாக, சிறிலங்கா விடயத்தில் நவிப்பிள்ளை அம்மையாரின் Feb18அறிக்கை ஏலவே தெரிவித்திருந்தது.
அமெரிக்காவும்,பிரிட்டன் போன்ற நாடுகள் ஈழ பிரச்சனையை கொண்டு வருகிறார்கள் ,ஆனால் இஸ்லாமிய நாடுகளும்,சீனா
மற்றும் கமுனுஸ் நாடுகள் எதிர்கின்றன இவர்களுக்கு என்னதான்
வேண்டும் என்று அம்மையார் நவநீதம் பிள்ளை கேட்கணும்.