மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370-இல், சீனப் பயணிகள் பயங்கரவாத, கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் சாத்தியமில்லை என்பதை மலேசியாவுக்கான சீனத் தூதர் ஹுவாங் ஹுய் காங் உறுதிப்படுத்தியுள்ளார்.
தீபெத்தைச் சேர்ந்த யுய்கோர் பயணி ஒருவர் விமானத்தைக் கீழறுப்புச் செய்ததாக நினைப்பதற்கு எந்தக் “காரணமுமில்லை, ஆதாரமுமில்லை” எனச் சீன அதிகாரிகள் கருதுவதாக ஹுவாங் கூறினார்.
“மற்ற 151 சீனப் பயணிகளைப் பொறுத்தவரை அவர்கள் எம்எச்370-க்கு எதிராக செயல்பட்டார்கள் என்பதைக் காட்டும் ஆதாரம் ஏதுமில்லை. எனவே, அவர்கள் பயங்கரவாதத்தில் அல்லது கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்துக்கே இடமில்லை”, எனச் சீனத் தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
சீனப் பயணிகள் விமானத்தைக் கடத்த வாய்ப்பில்லை என்று சீனா கூறியிருப்பதை பார்த்தால், இதை ஏன் மலேசியே பயணிகள் விமானத்தைக் கடத்தியிருக்க மாட்டார்கள் என்று கேட்பதுபோல் தெரிகிறது, நியாம்தானே !!!!!!!