2013 – ஆம் ஆண்டுக்கான SPM, STPM தேர்வு முடிவுகள் நாளையும் நாளை மறுநாளும் வெளியிடப்படும்.

SPM2013 – ஆம் ஆண்டுக்கான STPM தேர்வு முடிவுகள் நாளையும் SPM தேர்வு முடிவுகள் நாளை மறு நாள் வியாழக்கிழமையும் வெளியிடப்படுவதாக மலேசிய தேர்வு மன்றத்தின்  பொது உறவு அதிகாரி  Khawari Idris  தெரிவித்தார். மாணவர்கள் மலேசிய தேர்வு மன்றத்தின்  அகப்பக்கமான http://www.mpm.edu.my  வாயிலாக  நண்பகல் 12 மணி  தொடக்கம், அவர்கள்  தேர்வு முடிவுகளை அறியலாம்.