இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிக்கின்றன! சர்வதேச விசாரணை அவசியம்!– ஜேர்மனியும்,டென்மார்க்கும் கண்டனம்

germany-denmark-flagஇலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக ஜேர்மனியும், டென்மார்க்கும் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டின் 25வது அமர்வில் அறிக்கை ஒன்றை விடுத்து இந்த நாடுகள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளன.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்க தவறியிருக்கிறது.

அத்துடன் மனித உரிமை நிலவரங்களும் தொடர்ந்தும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இந்த விடயம் மிகவும் பாரதூரமானது.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரங்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிப்பதுடன், சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை ஒன்றுக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஜேர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

TAGS: