இறுதிக்கட்ட யுத்தத்தின் பேது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் இதற்கு ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகள் தெளிவு படுத்தும் நடவடிக்கையில் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் முன்னெடுத்தன.
என்னால் வாகரை முதல் மாத்தளன் வரை நடந்தவற்றை குறிப்பிட முடியும் எம்மை சுயாதீன வைத்தியத் துறையான எம்மால் மக்கள் பணியை முழுமையாக செய்ய அரச தரப்பு தடைகளை ஏற்படத்தியதுடன் மக்கள் பாரிய பின்னடைவைச் சந்திக்க காரணமாயிருந்தது எனலாம்,
வாகரை பிரதேசத்தை இராணுவம் ஆக்கிரமித்த போது பலத்த உயிரிழப்புக்களும் மனித உயிர்கள் வதையும் இடம் பெற்றதை யாவரும் நன்கறிவர் இதற்கு இன்று பல சாட்சியங்கள் உண்டு
விடுதலைப் புலிகளி கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருந்து வந்த எனக்கு கருணா குழு, பிள்ளையான் குழு, மற்றும் ஈபிடிபியின் அச்சுறுத்தலும் மிரட்டலும் மீண்டும் என்னை விடதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றது
அங்கும் முன்னர் பட்ட பாடுகளுக்கு ஈடான அதீத பாடுகள் இறுதி யுத்தத்தில் மக்கள் பட்ட படுகள் இழப்புக்கள் அவலங்களை கூறுவதற்கு வரிகளில்லை இதை யார் அறிவார் நான் மட்டும் மக்களுக்கு வைத்தியம் செய்ய பட்ட கஸ்டங்கள் எண்ணிலடங்காதவை
முழுமையான வைத்திய உபகரணம் இல்லை மக்களை பராமரிக்க வைத்திய வசதிகள் இல்லை
இவ்வாறாக பாரிய அழிவுகளைச் சந்தித்து மீண்டு வந்த எம்மை அரசு மிரட்டி அங்க நடந்த உண்மைச் சம்பவங்களை மூடி மறைக்க எம்மை கையான்டது எமது பயபீதி அதற்கு அனுமதித்தது என்றார்.
தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் வைத்திய கலாநிதி துரைராஜா வரதராஜா இன்றைய கலந்துரையாடலில் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள பல நாடுகள் தன்னார்வ நிறுவனப் பிரதி நிதிகள் கலந்து கொண்ட அமர்வில் சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே யுத்த சூனியவலயத்தில் மக்கள் படும் அவலம் அன்மையில் இலங்கை இராணுவத்தால் பலியல் சீரளிவுக்கு உள்ளாக்கப் பட்ட பெண்களின் திரைப்பட்த்தையும் திரையிட்டதுடன் பல பங்கு பற்றுனர்களின் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத் தக்கது