ஆஸ்திரேலிய பிரதமர் டோனி எப்பட், செயற்கைக்கோள் இரண்டு பொருள்களைப் படம்பிடித்திருப்பதாகவும் அவை மார்ச் 8-இல், 239 பேருடன் காணாமல்போன எம்ஏஎஸ் விமானத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
“தேடும் பணியில் புதிதாக, நம்பத்தக்க தகவல் வந்திருக்கிறது……இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியிலிருந்து”, என எப்பட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
விமானங்கள் பொருள்கள் காணப்பட்ட இடம் நோக்கி விரைவதாகவும் எப்பட் கூறினார்.
அப்போ இந்த கப்பலில் பயணித்தவர்களில் நிலை ..?
மனசெல்லாம் படக் படக்குது. கடவுளே அவர்களை காப்பற்றும் ..
நிலா,,,,,,,,,, கடவுளுக்கு நெறைய வேல இருக்கு,,,,,,MIC ,UMNO, MCA, ARMY, AIR FORCE இவங்க எல்லாம் சும்மா இருக்காங்க எதுக்கும் அவங்கள பிரார்தனை பன்னுங்க,,,,,,,,,,இவர்கள் கடவுளை விட சக்தியுள்ளவர்கள்
நிஜத்தை ஏற்க நாம் என்றும் தயங்கலாகாது. கற்பனை உலகில் பறந்துக் கொண்டு இப்படி அப்படி என்று தடம் தெரியாமல் பிதற்றுவது எவரையும் சரியான நிலையில் நிற்க வழி வகுக்காது. ஆகையால், பயணிகளின் நிலையை நாம் ஒருவாறு உணர்ந்துக் கொண்டோம். நடக்க வேண்டியதை கவனிப்போம்.