பேராக்கிலிருந்தும் பினாங்கிலிருந்தும் காஜாங் வந்துள்ள பிகேஆர் கட்சியினர், ‘Jom Balik Mengundi’ (வீடு திரும்பி வாக்களிப்போம்) என்னும் இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். காஜாங்குக்கு வெளியில் வசிக்கும் சுமார் 2,000 வாக்காளர்களைக் குறி வைத்துத் தொடங்கப்பட்டுள்ள ஒரு இயக்கம் அது.
தங்கள் வேட்பாளரான பிகேஆர் தலைவர் வான் அசீசா வான் இஸ்மாயிலுக்கு “எல்லா வாக்குகளும்” தேவைப்படுகின்றன, அப்போதுதான் அவர் மிகப் பெரிய வெற்றிபெற முடியும் என கோலா செபெத்தாங் பிரதிநிதி சுவா ஹீ லிங் கூறினார்.
தேர்தல் பரப்புரைக் காலத்தில் மீதமுள்ள மூன்று நாள்களில், இந்த காஜாங் தேர்தல் பிஎன் கூட்டரசு அரசாங்கம் மீதான ஒரு கருத்துக்கணிப்பு என்பதை காஜாங் வாக்காளர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சுவா குறிப்பிட்டார்.
மூன்று விவகாரங்கள் அவர்களுக்குக் கவனப்படுத்தப்படுவதாக அவர் கூறினார். நீதித்துறையின் அநீதி, உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம், அடுத்த ஆண்டு நடப்புக்குவரும் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி).
“இது, பிஎன்னின் அதிகார அத்துமீறலை மக்கள் எதிர்ப்பதைக் காண்பிக்கும் ஒரு கருத்துக்கணிப்பாக அமையும்”, என்றாரவர்.
அவர்கள் சரியில்லை இவர்கள் சரியில்லை என்பதை விடுத்து நீர் என்ன செய்வாய் இந்து சமுகத்துக்கு,புத்ராஜெயாவுக்கு போனவுடன் அல்ல இப்போது.அங்கே எவ்வளவு இந்துக்கள் இருக்காங்க,ஏழை மக்கள்,முதியோர்,ஒ.கே.யூ,தனித்து வாழும் தாய்,மேற்கல்வி தொடறும் மாணவர்கள் இப்படி வுதவி எதிர்பாா்கும் மக்களுக்கு என்ன செய்ய போகிராய்.நாராயண சித்தம்.
எது எப்படியோ நடுராத்திரியில் ஓட்டு என்ன படும் ,மின்சார தடை ஏற்படும் பழனி எப்படி தேய்தரோ அதே போல