சர்வதேச விசாரணைக்கு அமெரிக்க செனட் சபை ஆதரவு

bob_america_001இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள அமெரிக்காவின் செனட் சபை ஆதரவை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க செனட் சபையின் தலைவர் பொப் மெனன்ட்ஸ் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதில் அமெரிக்க அரசாங்கத்தினால் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைக்கப்படும் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும் நிலைப்படுத்துவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கம் நேர்மையான வழியில் விசாரணை ஒன்றுக்கு ஒப்புக் கொள்ளும் வரையில், சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்து பிரயோகிக்கப்பட வேண்டும் என்று அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

TAGS: