காஜாங்கில் வாக்களிப்புக்கு 48 மணி நேரத்துக்கும் குறைவான நேரமே இருக்கும் வேளையில், இன்று காலை பல தொழுகை இல்லங்களிலும் பள்ளிவாசல்களிலும் டிஏபி ஸ்டிக்கர்கள்(ஒட்டும் படங்கள்) ஒட்டப்பட்டிருந்தன.
நான்கு பள்ளிவாசல்களிலும் தொழுகை இல்லங்களிலும் சுங்கை கந்தான், செளஜானா இம்பியான், காஜாங் பாரு ஆகிய இடங்களில் உள்ள கொடைவள்ளல் ஊஜாங் பாகோங்கின் இல்லங்களிலும் அந்த ஒட்டும் படங்கள் காணப்பட்டதாக பிகேஆரின் காஜாங் இடைத் தேர்தல் துணை இயக்குனர் சுரைடா கமருதின் கூறினார்.
பக்காத்தான் ரக்யாட் பணியாளர்கள் அதைச் செய்திருக்க மாட்டார்கள் என்று மறுத்த சுரைடா, மலாய்க்காரர்களைச் சினமூட்டுவதற்காக யாரோ அதைச் செய்திருக்கிறார்கள் என்றார்.