பெர்துக்குத் தென்மேற்கே, இந்தியப் பெருங்கடலில் செயற்கைக்கோள்கள் பார்த்த மிதக்கும் பொருள்களைக் கண்டுபிடிக்கும் ஆஸ்திரேலியாவின் தேடும் நடவடிக்கை இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது.
தேடலுக்கு உதவியாக நீண்ட தூரம் பறக்கக் கூடிய நவீன ஜெட் விமானங்கள் இரண்டைச் சேர்த்துக் கொண்டிருப்பதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு ஆணையம் இன்று காலை அறிவித்தது. ஏற்கனவே உள்ள நான்கு பி3 ஓரியன் ரக விமானங்களையும் சேர்த்து இப்போது ஆறு விமானங்கள் தேடலில் ஈடுபட்டுள்ளன.
பி3 ஓரியன் விமானங்களால் இரண்டு மணி நேரம் மட்டும்தான் தேடும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். புதுவகை ஜெட் விமானங்கள் ஐந்து மணி நேரத்துக்குப் பறக்கும் வல்லமை கொண்டவை.
நம்ம rosmah ஜெட்லே போய் கண்டுபொஇடிப்பால் கவலைபடாதே najib
அவளை பிரைவேட் ஜெட்டில் ஏற்றிவிடுங்கள் . போய் சுற்றிபார்கட்டும் . நிச்சயம் கண்டுப்பிடிப்பாள். முடிந்தால் பாராசூட்டில் கட்டி கடலில் தள்ளிவிடுங்கள் . ரோஸ் உமாஹ் பொலெஹ் .