சிறிலங்காவின் களநிலவரத்தை பிரித்தானியாவின் டேவிட் கமரூன் அரசாங்கம் புறக்கணிப்பதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. சியராலியோனில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.நா பின்புலத்தைக் கொண்ட அனைத்துலக தீர்ப்பாயம் போன்று சிறிலங்காவில் உருவாக்கப்பட வேண்டும் என்று, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் இந்தியாவின் தி இந்து நாளிதழில் எழுதியிருந்த கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர், சிறிலங்காவில் போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்கத்தில் அவர் உண்மையான அக்கறை கொண்டிருந்தால், இத்தகைய திட்டத்தை பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் முன்வைத்திருக்கமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகையதொரு விசாரணையில் இந்தியத் தலையீடுகள், இந்திய அமைதிப்படையினரின் விவகாரங்கள் குறித்தும் விசாரிக்க நேரிடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.