இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வு அழைப்பு விடுத்துள்ள சர்வதேச விசாரணைக்கு கனேடிய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் போல் டேவர் பிரேரணை ஒன்று நேற்று முன்வைத்தார்.
சர்வதேசத்தின் முன் இலங்கையின் போர்க்குற்ற விசாரணையை கொண்டு செல்வதற்கு கனடா தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று டேவர் குறிப்பிட்டுள்ளார.
இந்தநிலையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை கண்டறிவதில் அந்த நாட்டின் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளமையை அடுத்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் கனடா தமது உறுதிப்பாட்டை வெளியிடுவதாக கனேடிய நாடாளுமன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.