சரவாக் பாலிஞியான் தொகுதி இடைத் தேர்தலில் பிஎன் வெற்றி

 

Balingan-BNசரவாக் மாநில பாலிஞியான் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிஎன் வேட்பாளர் யுஸ்ஸிப்நோஸ் 8,194 வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் அப்துல் ஜாலில் புஜாங் 1,283 வாக்குகளைப் பெற்றார்.

செலுத்தப்பட்ட மொத்த வாக்குகளில் யுஸ்ஸிப்நோஸ் 84 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். பிஎன் பெரும்பான்மை வாக்குகள் 6,911 ஆகும்.