சிறிலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து நம்பகமான,சுதந்திரமான அனைத்துலக விசாரணை கோரும் தீர்மானத்துக்கு, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இந்தியா ஆதரவளிக்காதது குறித்து சீக்கியர்களின் அமைப்பான அனைத்துலக தல் கால்சா (Dal Khalsa) கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின்தலைவர், சர்தார் ஹர்சரன்ஜித் சிங் தாமி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
“இந்தியாவினது இந்த பிரதிபலிப்பை, சீக்கியர்கள் மற்றும் காஷ்மீரிகளினதும் மற்றும் ஏனைய சிறுபான்மை இனங்களினதும், மீதான தமது சொந்த மனிதஉரிமை மீறல்களின் பின்னணியில் நோக்க வேண்டும்.
இந்தியா தமிழர்களுக்கு துரோகமிழைத்து, மீண்டும் அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தை மேற்கு நாடுகள் ஆதரித்த போதிலும், ஐ.நா கோட்பாடுகளுக்கு முரணானது என்று கூறி இந்தியா வாக்களிப்பில் பங்கேற்காமல் விட்டுள்ளது.
இந்தியாவினது அமைதி ஒன்றும் புதியதல்ல.
சர்ச்சைக்குரிய விவகாரங்களில் அது எப்போதும் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டுள்ளதுடன், பலமுறை அது குத்துக்கரணங்களையும் அடித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்களுக்காக, நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எமது அமைப்பின் விருப்பம்.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவு தெரிவித்து எமது அமைப்பு ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு மனு ஒன்றை அனுப்பிவைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்மதன் … தெரியலையே…!
எங்களது துயரங்கள் அறிந்து கண்டனம் தெரிவித்த சீக்கிய அமைப்புக்கு நன்றி.
சீக்கிய
அமைப்புக்கு ரொம்ப
நன்றி
.
மிக்க நன்றி சர்தார் !! இந்தியன் என்ற உணர்வு உங்களுக்கு (சீக்கியர்கள் ) குறைந்ததே இல்லை . இந்திய -பாகிஸ்தான் எல்லை பிரிக்கப்பட்டபோது கொள்ளப்பட சமுதாயம் சீக்கியர்களே !! அந்த வழியும் உணர்வும் இன்னும் செத்துப்போகவில்லை என்பதை எடுதுகாட்டுவதே இந்த கண்டனம். அந்த இன படுகொலை வரலாற்றில் செதுக்கப்பட்ட உண்மை . அதேபோன்று , பொற்கோவிலை தாக்கி சீக்கிய சகோதர்களை , இந்திரா காந்தியின் உத்தரவில் கொலை வெறியாட்டம் ஆடியதையும் சீக்கியர்கள் மறந்ததில்லை !! அதேபாணியில் , இலங்கைக்கு சென்ற இந்திய படைகள் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழர்களை வதை செய்து காம களியாட்டம் போட்டதும் உலகம் அறியும். இன்னும் எவ்வளவு காலம் ஹிந்தி காரன் செய்யும் கொடுமைகளை பார்த்துக்கொண்டு இருக்கப் போகிறது தமிழகம் !! இங்கே நாங்கள் மாற தொடங்கிகித்டோம் , நீங்கள் எப்போது ???