ஐ.நா கூட்டத் தொடரில் இந்தியா நடுநிலை வகித்திருப்பது, நம்பிக்கையோடு இருந்த பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் மக்களை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவாத் தீர்மானத்தில் 25வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும், நடுநிலையாக 12 நாடுகளும் வாக்களித்திருந்தார்கள்.
இதிலே எங்களுக்கு மிக முக்கியமாக ஆராயப்பட வேண்டிய விடயமாக இருப்பது இந்தியா.
குறிப்பாக இந்த விடயம் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் ஒரு தேசிய பிரச்சினைக்கு கருத்து தெரிவிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. எங்களது கட்சி அது சார்பாக இந்தியா இம்முறை நடுநிலை வகித்தது சார்பான கருத்துக்களை எங்களது கட்சி தலைமை வெளியிடும்.
ஆனால் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர் என்ற ரீதியிலும், பல இந்து அமைப்புக்களின் முக்கிய பதவிகளை வகிப்பவன் என்ற ரீதியிலும், விஷ்வ ஹிந்துப் பரிசத்தின் இலங்கைக்கான அரசியல் பிரதிநிதி என்ற ரீதியிலும் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் கடமைப்பாங்கு எனக்கு இருக்கின்றது.
இந்த வகையிலே கடந்த யுத்த சூழலிலே இலங்கையிலே கொல்லப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் இந்துக்கள். உலகிலே நேபாளத்திற்கு அடுத்தாக 82 வீதமான இந்துக்களை கொண்டிருக்கும் பெரிய நாடும், இலங்கைக்கு அருகாமையில் இருக்கின்ற நாடும் இந்தியா என்பதை யாரும் மறுக்க முடியாது.
இலங்கை மக்கள் சார்பாகவும், பாதிக்கப்படும் தமிழ் மக்கள் சார்பாகவும் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு முக்கிய பங்கை கொண்டிருக்கும் நாடு இந்திய நாடாகும்.
இந்தியாதான் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கும் என்பது இலங்கை தமிழ் மக்கள் நீண்டகால நம்பிக்கையாக இருந்தது. இன்று நடுநிலையில் இருப்பதை இட்டு அந்த மக்கள் தங்களது அதிர்ச்சியை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இந்த முறை இந்தியா நடுநிலைக்கு வந்தது தமக்கும் சர்வதேச விசாரணையில பிரச்சனை ஏற்படுமோ என்ற பயநிலையா என தமிழ் மக்களிடம் கேள்வி எழுந்து நின்றிருக்கின்றது.
1987ம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒப்பந்தங்கள் வந்த போது இந்தியா ஒப்பந்தத்தின் பின் தமது அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி இருந்தது. அந்த அமைதிப் படையினால் இலங்கையிலே பல மனித உரிமை மீறலைச் செய்திருக்கின்றது என்பதனை இப்போது இலங்கையில் காணாமல் போனோர் பற்றி ஆராயும் குழு ஆராய முற்படுகின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இந்த நிலையும் இந்தியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
காணாமல் போனோரை கண்டறியும் இக்குழுவில் 1983ம் ஆண்டுக்கு பின்னராக கொலைகளும் ஆராயப்பட இருக்கின்றது. அந்த வகையிலே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின் இலங்கையிலே அமைதி காக்கும் படையணியை பயன்படுத்தியது. அதிலே பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அது உண்மை.
அச்சம்பவம் நடைபெற்றிருக்கின்றது. அது இலங்கையிலே மக்களால் காணாமல் போனோர் பகுதியில் கருத்து தெரிவிக்கப்படவுள்ளது. இவை இந்தியாவின் தற்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தை பாதிக்கக் கூடியதாகும்.
அது சார்பாக விசாரணை வரும் போது தங்கள் நாட்டுக்கு அது பங்கமாக அமையலாம் என்பதனால் அவர்கள் நடுநிலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றார்கள். அடுத்த படியாக இந்திய நாட்டில் தற்போது இருப்பது காங்கிரஸ் ஆட்சி. ஆகவே இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தான் கொன்றார்கள் என்ற சந்தேகம் இன்றுவரை இந்தியாவில் இருக்கின்றது.
ஆகவே அவரது துணைவியார் தற்போது காங்கிரஸின் தலைவராக இருக்கின்றார். அதன் நிமிர்த்தம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச விசாரணை வந்தால் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான நீதி கிடைக்கப்படுவதை விரும்பாமலும் இருக்கலாம்.
ஆத்தோடு இலங்கை அரசின் சீனா தொடர்பு, இந்திய மீனவர் பிரச்சனை தோன்றும் வேளையில் தமது கருத்துக்களுக்கு இலங்கை செவிமடுக்காது, தாம் இலங்கை அரசாங்கத்தால் புறம் தள்ளிப்பார்க்கப்படலாம் என்ற சுயநல உணர்வு.
இவ்வாறு பலதரப்பட்ட விடயமாக இந்தியாவின் செயற் பாட்டை நாம் யோசிக்க வேண்டிய சூழலில் இருக்கின்றோம். இன்றுவரை நாங்கள் கருதிக் கொண்டிருப்பது இலங்கை தமிழ் மக்களுக்கு நியாயமான, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாக செயற்படும் எனப்தே. ஆனால் இவர்கள் நடுநிலை நம்பியிருந்தோருக்கு ஏமாற்றமளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆமாம், சீனன் வடக்கேவும் தேர்கேவும் இருக்கிறான் ….!
இதே கொண்டயன்களுக்கு இலங்கையில் தமிழர்களுக்கு போல் நிலை வந்திருந்தாள் இந்திய சிங்கு சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டு வேடிக்கை பார்க்குமா ????
தமிழர்க்கு தேவை ஒற்றுமையே. அதுவே முதல் வேத மந்திரமாக வேண்டும். அதை எப்படி, எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதை நோக்கி சிந்திக்க வேண்டும்