சர்வதேச விசாரணை அழைப்பின் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் அவசியம்!- பான் கீ மூன்

mahi_bankimoon_01இலங்கை மீதான போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை கோரி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர், பொறுப்புக்கூறல் என்ற விடயம் அவசியமான ஒன்றாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூனின் இந்தக் கருத்தை அவரின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் இலங்கை அரசாங்கம், நிறைவேற்றப்பட்ட ஜெனீவா யோசனைக்கு மதிப்பளித்து சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றும் பான் கீ மூன் கோரியுள்ளார்.

இலங்கை விடயத்தில் அந்த நாட்டு அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணைக்கு வரவேற்பு மற்றும் இலங்கை அரசாங்கம் அதற்கு ஒத்துழைக்க வேண்டிய விடயங்களை பான் கீ மூன் குறிப்பிட்டு கூறியிருப்பதாக பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: