பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்பை குண்டு வைத்து கொலை செய்ய முயற்சி செய்யப் பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் முஷரப் தமது பண்ணை இல்லத்திற்கு காரில் சென்ற போது வெடிகுண்டு வெடித்தது.
ராணுவப்படை கார்டியாலஜி இன்ஸ்டியூட்டில் இருந்து முஷரப்பின் பண்ணை இல்லம் நோக்கி கார் சென்றபோது சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
குண்டுவெடிப்பு குறித்தான சேதங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. சமீபத்தில் முஷரப் கோர்ட் டுக்கு சென்றபோதும் அவரை குறிவைத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.