நஜிப் ஆஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார், ஆனால் கேள்விகளைத் தவிர்த்தார்

najibஆஸ்திரேலியா  சென்றுள்ள  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  எம்எச்370  விமானத்தைத்  தேடும்பணியில்  உதவும்  ஆஸ்திரேலிய  பிரதமருக்கு  நன்றி  தெரிவித்தார்.  ஆனால், செய்தியாளர்களின்  கேள்விகளுக்குப்  பதிலளிப்பதைத்  தவிர்த்தார்.

சிஎன்என் -இல்  நேரடியாக  ஒளிபரப்பான  செய்தியாளர்  கூட்டத்தில்  நஜிப்  ஓர்  அறிக்கையை  வாசித்தார். ஊடகங்கள்  கேள்வி  கேட்கத்  தொடங்கியதும்  செய்தியாளர்  கூட்டத்தைவிட்டுப்  புறப்பட்டார்.

செய்தியாளர்  கூட்டத்தில்  அவருக்குமுன்  பேசிய  ஆஸ்திரேலிய  பிரதமர்  டோனி அப்பட்டும்  கேள்விகளுக்குப்  பதிலளிக்கவில்லை.  அவரும், நஜிப்புடன்  புறப்பட்டுச்  சென்றார்.