விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புக்களை ஒருபுறம் இலங்கை அரசு தடை செய்துள்ள நிலையில் மறுபுறம் புலம்பெயர் செயற்பாட்டாளர்களது குடும்பங்களை தாயகத்தில் வேட்டையாடும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது.அவ்வகையில் கரவெட்டி அல்வாய் தெற்கினை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணொருவரும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை யோகராணி என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பிள்ளைகள் அனைவரும் புலம்பெயர் தேசங்களில் வசித்து வருவதாகவும் அவர்களை தொடர்புபடுத்தியே இக்கைது இடம்பெற்றுள்ளதாகவும் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகின்றது.
கைதான பெண்மணிக்கு கொழும்பிலும் வீடொன்று உள்ளதாகவும் அங்கு தங்கியிருந்த நிலையிலேயே அவர் கைதாகி உள்ளதாகவும் தெரிய வருகின்றது.
முன்னதாக வடமராட்சியின் கரவெட்டி அல்வாயிலுள்ள வீட்டிற்கு வெள்ளைவான் நபர்கள் தேடிச் சென்றிருந்ததாகவும் அதன் தொடர்;ச்சியாகவே கொழும்பில் அவர் கைதாகி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.