இலங்கை மீது சர்வதேச விசாரணைக்காக பிரித்தானியா சர்வதேச பங்காளிகளுடன் நெருங்கி செயற்படும்!- கமரூன்

david-cameron_2இலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.

கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார்.

தம்மைப் பொறுத்தவரை இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை, நல்லிணக்கம் என்பன அந்த நாட்டின் சமாதானத்துக்கு அவசியமானவை என்று கமரூன் சுட்டிக்காட்டினார்.

இந்த நடைமுறைகளே இலங்கை காத்திரமான இடம் ஒன்றை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் என்றும் கமரூன் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது தாம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுடன் தனிப்பட்ட ரீதியில் யோசனைக்கு ஆதரவை கோரியதாக கமரூன் குறிப்பிட்டார்.

TAGS: