நேற்று கெடா, பாலிங்கில், 40 ஆண்டுகளுக்குமுன் முற்போக்கு மாணவர் குழு ஒன்று விவசாயிகளின் உரிமைகளுக்காக நடத்திய போராட்டத்தை நினைவுகூறும் பேரணியில் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 10,000 பேர் கலந்துகொண்டார்கள்.
பாஸ் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த அப்பேரணி பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கி நள்ளிரவுவரை நடந்தது. பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், கெடா ஆணையர் மாபுஸ் ஒமார் முதலியோர் அதில் உரையாற்றினார்கள்.
1974-இல் தேசிய இஸ்லாமிய மாணவர் சங்கம் விவசாயிகளுக்காக நடத்திய போராட்டத்தில் அப்போது மலேசிய இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவராக இருந்த அன்வார் இப்ராகிம் கைது செய்ப்பட்டார்.
அப்போராட்டம்தான் அன்வார் இப்ராகிமின் அரசியல் வாழ்க்கையைத் தொடக்கி வைத்தது என்றும் சொல்லலாம். அனால், நேற்றைய நிகழ்வில் அவரைக் காணவில்லை.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே. ஏதோ நடக்கப்போகின்றது என்பதின் முன் அறிகுறியே இது.
போங்கடா நாங்க கொட்டுர மழை இல வெயிட் பண்ணும் ஒரு கமினடியும் வரல அவன எப்படி நம்புவது இந்த முட்டால் மக்க மண்டைக்கு ஏறது யலாம் சவவுங்கடா