போர்க்குற்ற கண்காணிப்பாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது!

navaneetham-pillai1ஐக்கிய நாடுகளின் போர்க்குற்றக் கண்காணிப்பாளர்கள் நாட்டுக்குள் வர அனுமதிக்ககூடாது என்று தென்னிலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு நாட்டுக்குள் அவர்களை அனுமதிப்பதன் மூலம் ஏற்கனவே அவர்கள் தயாரித்து வைத்திருக்கும் இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல் அறிக்கைக்கு சட்ட அந்தஸ்து வழங்குவதாக அமைந்து விடும் என்று தென்னிலங்கை பேராசிரியரான நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசாங்க செய்தித்தாளுக்கு தகவல் அளித்துள்ள அவர், நவநீதம்பிள்ளை ஏற்கனவே தயாரித்து வைத்திருக்கும் அறிக்கை, கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதன் காரணமாக மாற்றம் பெறப்போவதில்லை என்று நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் கொள்கையை மேற்கு நாடுகளுக்கு விட்டுக்கொடுத்ததாக இந்த செயல் அமைந்து விடும் என்றும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாகாணசபை தேர்தலின் முடிவுகளை கொண்டு மேற்கத்தைய நாடுகள் இலங்கை மக்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்துக் கொள்ளவேண்டும்.

இதேவேளை உள்ளூர் பொறிமுறையின் மூலம் பிரித்தானியா, நவநீதம்பிள்ளையின் யோசனையை குப்பை தொட்டியில் எறியும் நிலை ஏற்படவேண்டும்.

பிரித்தானியா காலணித்துவ காலத்திலும் தற்போதும் இலங்கையில் பிரச்சினையை உருவாக்க முனைவதாக நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.

TAGS: