இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
ஏபி செய்திசேவைக்கு இந்த கருத்தை இன்று வெளியிட்டுள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மேற்கொள்ளும் விசாரணையை இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார்.
ஏற்கனவே பிள்ளை இலங்கை தொடர்பில் முன்கூட்டிய தீர்ப்பு ஒன்றை கொண்டிருப்பதால் அவரின் விசாரணைகள் நியாயமாக இருக்கும் என்று நம்ப முடியாது என்று பீரிஸ் தெரிவித்தார்.
இலங்கை குறித்த விசாரணையில் பங்கேற்காது. இலங்கை அதனை ஏற்றுக்கொள்ளாது என்று பீரிஸ் வெளிநாட்டு செய்தியாளர்களுக்கான சந்திப்பின் போது கூறினார்.
போர்க்குற்றங்களை சுமத்தியுள்ள நாடுகளே விசாரணைகளுக்கும் நிதியளிப்பதால் அது நியாயமாக இருக்காது.
இந்தநிலையில் நவநீதம்பிள்ளை போர் முடிவடைந்த காலத்தில் இருந்தே இலங்கைக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தி வருவதாக பீரிஸ் குறிப்பிட்டார்.
சர்வதேச விசாரணையை ஏற்க மாட்டோம் – இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
தமக்கு எதிரான சர்வதேச விசாரணையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக மீண்டும் அறிவித்துள்ளது. அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையால் உருவாக்கப்படவிருப்பதாக கூறப்படும் சர்வதேச விசாரணை குழுவையும், இலங்கைக்குள் அனுமதிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளைத் தளமாக கொண்ட செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, முற்றுமுழுதாக இலங்கையின் இறைமையை பாதித்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை என்ன நாடா அல்லது ரவ்டிகளின் கூடாரமா?
இராவணின் அகங்காரம் தலைக்கு ஏறியதால் சிவனால் ஒடுக்கப்பட்டான். அந்த நிலை இப்பொழுது இலங்கை அரசாங்கத்திற்கு வந்துள்ளது.