மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சர்வதேச விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களையும் சாட்சிகளையும் வழங்குகின்றவர்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்காக எதிர்வரும் வாரங்களில் நவநீதம்பிள்ளை குழு ஒன்றை நியமிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவ்வாறான விசாரணையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த குழுவின் முன்னால் சாட்சி வழங்கவோ, அல்லது ஆதாரங்களை வழங்கவோ யார் முற்பட்டாலும், அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
என்னடா ஞாயம்.படுகொலைகள் செய்து விட்டு சர்வதேசத்தை ஏமாற்றிய நாய்கள் நீ.சாட்சி சொன்ன தண்டனையா, இது என்னா கொடுமையா இருக்கு.?
இதட்கு உலக தமிழர் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும்! வாருங்கள் எல்லோரும் கைகொர்போம் .
கொலையையும் செய்து விட்டு பார்த்தவர்கள் சாட்சி சொன்னால் அவர்களையும் கொலை செய்வோம் என்று அவன் கூறும் தைரியம் அவனது ஆயுதபலம். அதை 8 கோடி தமிழர்களின் ஒற்றுமை பலம் மூலம் வெற்றி கொள்ள முடியம்.