ஐ.நா.வின் விசாரணைக்கு பங்கேற்று, உரியமுறையில் பதிலளிக்க வேண்டும்!– லக்ஸ்மன் கிரியல்ல

laxman_giriyella_001அரசாங்கம் நாட்டையும் படையினரையும் காட்டிக் கொடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஜெனீவா தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

தீர்மானத்தின் ஊடாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடும்.

அரசாங்கம் இவ்வாறான நிலைமைகளை எதிர்நோக்கத் தயாரா?

விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடுகி;ன்றார்.

அவ்வாறு விசாரணைகளில் பங்கேற்காவிட்டால் எமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஒருதலைபட்சமாக நிரூபிக்கப்படும்.

விசாரணைகளில் பங்கேற்க வேண்டும். குற்றச்சாட்டுக்களுக்கு உரிய முறையில் பதிலளிக்க வேண்டும்.

புலம்பெயர் அமைப்புக்களை பணம் அனுப்புமாறு அரசாங்கம் கோரியது தற்போது அந்தஅமைப்புக்களை தடை செய்துள்ளது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நகைப்பிற்குரியது என லக்ஸ்மன் கிரியல்ல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

TAGS: