சர்வதேசத்தின் கோரிக்கைகளை இலங்கை செவிமடுக்க வேண்டும்: பிரித்தானியா

huge_swire_001சர்வதேச சமூகத்தின் கோரிக்கைகளை இலங்கை செவிமடுக்க வேண்டும் என்று பிரித்தானிய வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகம் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக இலங்கைக்கு செய்தியை அனுப்பியிருக்கிறது.

இந்தநிலையில் அந்த சர்வதேச சமூகம் எதனை எதிர்ப்பார்க்கிறது, எதனை கேட்கிறது என்று இலங்கை ஆராய வேண்டும் என்று அமைச்சர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நடத்தப் போகும் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகள் மூலம் இலங்கைக்கு நன்மைகளே கிடைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மனித உரிமைகள் பேரவையின் சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று இலங்கை அறிவித்துள்ள நிலையிலேயே பிரித்தானிய அமைச்சர் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

TAGS: