அந்த 28-வயது வங்காளதேசி தொழிலாளரிடம் வேலைசெய்யும் அனுமதி இருந்தும்கூட கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கூடவே, மூன்று பிரம்படிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலை 19-இலிருந்து நவம்பர் 18வரை அவர் சிறையில் இருந்தார். அக்டோபர் 9-இல் பிரம்படி கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அக்டோபர் 25-இல், வழக்கை மீள்பார்வை செய்த பினாங்கு உயர் நீதிமன்றம் அவர்மீதான குற்றச்சாட்டைத் தள்ளிவைத்தது.
மேலும், அத்தொழிலாளர் சிறை வைக்கப்பட்டதையும் அவருக்குப் பிரம்படி கொடுக்கப்பட்டதையும் அறிந்து நீதிபதி ஸமானி அப்துல் ரஹிம் அதிர்ச்சி அடைந்ததாக அத்தொழிலாளரின் வழக்குரைஞர் எஸ்.ரவீந்திரன் கூறினார்.
இன்று, அத்தொழிலாளர், அலாமின் ஷேக் பாட்ஷா ஷேக், குற்றமற்ற தன்னைக் குற்றவாளியாக்கி சிறையில் தள்ளியதற்காகவும் பிரம்படி கொடுத்ததற்காகவும் ரிம3 மில்லியன் (அடிக்கு ஒரு மில்லியன்) இழப்பீடு கேட்டு மலேசிய அரசாங்கத்தின்மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின்மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
நல்லது நடந்தா செரி.
சபாஷ்! இப்படித்தான் செய்யணும்! வங்காள தேசி என்ன பரதேசிப் பயலா!
அடிஹ்சவன என்ன பண்ணப்போறிங்க ?