காணாமல்போன மலேசிய விமானமான எச்எம்370-ஐத் தேடும்பணி தொடங்கி இன்றுடன் 37நாள்கள் ஆகின்றன. 11 இராணுவ விமானங்கள், ஒரு சிவில் விமானம், 14 கப்பல்கள் தேடும்பணியில் ஈடுபட்டிருப்பதாக கூட்டு ஒருங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி) அறிவித்தது.
தேடும்பணி பெர்த்துக்கு 2,200கி.மீ. தொலைவில் 57,506 சதுர கி.மீ.பரப்பில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய ஜேஏசிசி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக சமிக்ஞைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்றும் சொன்னது.