பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணிவோரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்படும்: கோத்தபாய

gotabhaya-rajapakseபயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணிவொரின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக இவ்வாறு சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட உள்ளது.

பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணி வரும் நபர்களின் தராதரத்தைப் பாராது சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடும்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: